பதிவு செய்த நாள்
24
அக்
2015
11:10
சென்னை: கோவிலுக்கு சொந்தமான, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, அறநிலைய துறை மீட்டது. சென்னை, எழும்பூர், சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 2,400 ச.அ., இடம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. அறநிலைய துறைக்கு சொந்தமான, அந்த இடத்தை குத்தகை எடுத்த நபர், பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. இதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.கடந்த, 30 ஆண்டுகளாக நடந்த வழக்கில், தற்போது அறநிலைய துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், அந்த இடத்தை அறநிலைய துறை மீட்டது.