பதிவு செய்த நாள்
26
அக்
2015
10:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், வராஹி அம்மன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில், உள்பிரகாரத்தின் சுற்று பகுதியில் ஈஸ்வரனின் அவதார திருவுருவம், பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் உள்ள லிங்கங்கள், பரிவார சக்திகளான சப்தமாதர்கள், நாயன்மார்களின் சிலைகள் உள்ளது. பார்வதியின் பரிவார சக்திகளான சப்தமாதர்களில், முக்கிய மானவர், பன்றி உருவம் கொண்ட வராஹி. உள்பிரகாரத்தில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வாராஹிக்கு பஞ்சமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ராகுகாலத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. வராஹியை வணங்குவதன் மூலம் பில்லி, சூன்யம், ஏவல், தோஷம் நீங்கி எதிரிகளிடம் இருந்து விடுபடமுடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரசித்தி பெற்ற வராஹிக்கு பக்தர் ஒருவர், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கவசத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். பஞ்சமி திதியில் நடைபெறும் வாராஹி சிறப்பு பூஜையில், வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வ ருகிறார்.