ஆடி கிருத்திகையை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2011 12:07
வில்லியனூர் : வில்லியனூர் சிவசுப்ரமணிய சுவாமிக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நேற்று நடந்தது.வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கே உள்ள சிவசுப்ரமணிய கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு சுவாமிக்கு 108 குடம் பால் அபிஷேகம் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 10 மணிக்கு 108 பால்குடத்திற்கு சங்கல்பம் செய்து மாட வீதியுலா நடந்தது. மதியம் 12 மணிக்கு மேல் தீபாராதனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 8.30 மணிக்கு மேல் தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி கோவிலை வலம் வந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் குருக்கள் பாலசுப்ரமணியம் தலைமையில் நகரவாசிகள் செய்தனர்.