பதிவு செய்த நாள்
28
அக்
2015
11:10
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, ஆர்.புதுப்பாளையத்தில் மாரியம்மன் கோவிலில், கடந்த, 22ம் தேதி, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பல்வேறு சமூகத்தினரின் கட்டளைதார் நிகழ்ச்சி நடந்தது. இதில், அம்மன் சத்தாபரணத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், நவம்பர், 2ம் தேதி வரை கட்டளைதாரர் நிகழ்ச்சியும், இரவு, 10 மணிக்கு பூவோடு எடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து, 3ம் தேதி அதிகாலை பில்லி சூனியம் போக்க சாட்டையடி நிகழ்ச்சியும், 4ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு அம்மன் சக்தி அழைத்தலும், காலை, 7 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில், ஆர்.புதுப்பாளையம் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் புனிதநீராடி கோவில் முன் ஏற்படுத்தப்பட்ட அக்னியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தொடர்ந்து, பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, எருதாட்டம், சத்தாபரணம், வாணவேடிக்கை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.