விழுப்புரம்: விழுப்புரம் நகர சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் கீழ்பெரு ம்பாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழா நடந்தது. விழாவையொட்டி, காலை மூலவர் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு 200 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின், அன்னாபிஷேக அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் மற்றும் கைலாசநாதர் ஆகிய கோவில்களில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.