திருத்தளிநாதர் கோயிலில் நவ.12ல் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2015 11:10
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நவ.12ல் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. ஒரு வாரம் நடைபெறும் விழாவில் நவ.12 மாலை 6 மணிக்கு முருகனுக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் துவங்குகிறது. தினசரி மாலை 5 மணிக்கு மாணவ,மாணவிகள் பக்திப்பாடல் ஒப்புவித்தலும், மாலை 6 மணிக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு தீபாராதனை நடைபெறும். நவ.16ல் பக்திப்பாடல் ஒப்புவித்தவர்களுக்கு பரிசளிப்பு, நவ.17 காலை சண்முகார்ச்சனை,சிறப்பு அபிஷேகம், மாலையில் சூரசம்ஹாரம், நவ.18ல் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறும். ஏற்பாட்டினை திருமுருகன் திருப்பேரவையினர் செய்கின்றனர்.