திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் பழமையான வனரேணு காம்பாள் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 1ம்தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வரபூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து தனபூஜை, கோ-பூஜை, வாஸ்து சாந்தி உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு ஸ்பரிசாஹூதி, தத்துவார்ச்சனையும், காலை 9:30 மணிக்கு பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி விமானம், புதிய கொடிமரம் மற்றும் பரிவாரங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. அப்போது சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினர். சர்வசாதகத்தை அர்த்தநாரீசகுருக்கள் செய்தார். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், தக்கார் லட்சுமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.