பதிவு செய்த நாள்
03
நவ
2015
11:11
அரியலுார்: அரியலுார் அருகே, பழமையான பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அரியலுார் மாவட்டம், முத்துசேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்த அழகேசன், 22, நேற்று காலை, வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பாதத்தில் ஏதோ ஒரு பொருள் குத்தியதைப் போன்று உணர்ந்ததும், அதை எடுக்க முயன்றார்; முடியவில்லை. பின், தோண்டி பார்த்ததில், பழமையான பூஜை பொருட்கள் புதைந்திருந்தது தெரிய வந்தது.கை விளக்கு - 2, தாம்பாளம் - 3, கெண்டி சொம்பு - 1, 200 கிராம் எடை உள்ள ஆண், பெண் சிலை - 1, தீப கரண்டி - 1, உடைந்த சிலைகள் - 2 மற்றும் ஊதுவத்தி ஸ்டாண்டு ஆகியவற்றை கண்டெடுத்து, வி.ஏ.ஓ., செல்வராஜிடம் ஒப்படைத்தார்.