பதிவு செய்த நாள்
04
நவ
2015
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், உலக சைவ தினத்தை முன்னிட்டு, மினி மராத்தான் போட்டி நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலையில், உலக சைவ தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை நகராட்சி, வேகன் ரோட்டரி சங்கம் மற்றும் சத்குருஸ்ரீ ரமண தேவி அம்மையார் ஆகியோர் சார்பாக, மினி மாரத்தான் போட்டி நடந்தது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக, இரு பிரிவுகளில் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் பழனி துவக்கி வைத்தார். திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்திலிருந்து துவங்கி, தேரடி வீதி வழியாக, 14 கி.மீ தூரம் கிரிவலப்பாதையைச் சுற்றி வந்து, வேலூர் சாலையில் அண்ணா நுழைவு வாயிலில் போட்டி நிறைவடைந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு, 11ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு, 7ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு, 3 ஆயிரம் ரூபாய் என, பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 7 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.