நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. கால பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும் என ஐதீகம். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர் போன்ற 18 வகை பொருட்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கணக்கர் சரவணன், கவுன்சிலர் கலியபெருமாள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பூசணிக்காயில் விளக்கு ஏற்றி பைரவரை வழிபட்டனர்.