பதிவு செய்த நாள்
28
ஜூலை
2011
12:07
ஊட்டி : ஊட்டி பிங்கர் போஸ்ட் கேம்ப் முத்து மாரியம்மன் கோவிலில் வரும் 30ம் தேதி மூலிகை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஊட்டி பிங்கர்போஸ்ட் சுவாமி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள கோவிலில் ஆடிமாத சிறப்பு வழிபாடு கடந்த 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நாள்தோறும் காலை 6.30 மணிக்கு உதிரி பூ, தேன், பனை வெல்லம், வேப்பிலை, வில்வம், நல்லெண்ணெய் அபிஷேகம் மற்றும் சித்தர்களுக்கான பிரார்த்தனை, அர்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. செவ்வாய்தோறும் மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை ராகு கால பூஜை நடக்கிறது. வெள்ளி கிழமைகளில் காலை அபிஷேக ஆராதனை, விளக்கு பூஜை, ராகு கால பூஜை, பகல் 12.00 மணிக்கு மகா தீபாராதனை, கூட்டு வழிபாடு, நடக்கிறது. 30ம் தேதி காலை 6.00 மணிக்கு மூலிகை அபிஷேகம், 8.30 மணிக்கு மூலிகை கொண்டு சிறப்பு ஹோமம், கூட்டு வழிபாடு, தேவிக்கு சக்திமிகு மந்திர உச்சாடனம் நடக்கிறது. பகல் 12.00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சித்தர்களின் அருளோடு குழந்தைகளை வேப்பிலை படுக்கையில் இட்டு, மூலிகை மருந்துகள் அளிக்கப்படும். சித்தர்களின் அருளோடு குழந்தைகளை வேப்பிலை படுக்கையில் இட்டு, மூலிகை மருந்துகள் அளிக்கப்படுகிறது. மேலும், சகல பிணிகளில் இருந்து காத்து, தேக பலத்துடன் வாழ சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 3.00 மணிக்கு மாரியம்மன் அர்ச்சனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை "மானஸ் கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.