ஈரோடு: ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசையன்று ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உள்ள ராகவேந்திர ஸ்வாமி கோவிலில் லட்சுமி குபேர பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டும் இப்பூஜை நடத்தப்பட்டது. ஹயக்ரீவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் ஹயக்கீரிவர் ஹோமம் நடந்தது. குடும்பங்களில் ஐஸ்வர்யம், செல்வம் பெருக வேண்டி இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. பெண்கள் அதிகளவில் இந்த ஹோம பூஜையில் பங்கேற்றனர். இதே போல் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் ராகவேந்திரர், அனுமனுக்கு தைல காப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே தைல காப்பு அபிஷேகம் நடைபெறும். சன்னியாசிகளாக உள்ள ஸ்வாமிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை எண்ணெய் குளியலாக தைல காப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.