சேலம்: சேலத்தில் வசிக்கும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், நேற்று அதிகாலையில், தங்களின் வியாபார ஸ்தலங்களில், லெட்சுமி குபேர பூஜை நடத்தினர். இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு, பிரசாதத்துடன் துணி வகைகள், புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்கினர். பின்னர், புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.