Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கோவில் கல்வெட்டு ... ஏரல் சேர்மன் கோயிலில் ஆடி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2011
12:07

விக்கிரமசிங்கபுரம் : காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலில்  (30ம் தேதி) நடக்கும் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நெல்லை மாவட்டம் காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலின் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பண்டைய காலத்தில் கைலாய மலையில் சிவன்-பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமன்படுத்த அகஸ்தியர் பொதிகை மலை சென்றார். அப்போது தற்போது கோயில் இருக்கும் பகுதியில் அகஸ்தியர் லிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டது. பிற்காலத்தில் வாணிபம் விஷயமாக மாட்டு வண்டிகள் அவ்வழியாக சென்றபோது ஒரு கல்லில் மாட்டு குழம்புகள் பட்டு ரத்தம் கசிந்தது என்றும், இவ்வழியாக சென்ற பசு மாடுகள் ஓரிடத்தில் மட்டும் பால் சொரிந்தன என்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்தில் தோண்டி பார்த்தபோது அங்கு ஒரு லிங்கம் இருந்ததை கண்டு பரவசமடைந்தனர். பின்னர் அங்கு கோயில் எழுப்பி சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் என்பதால் காலப்போக்கில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்க துவங்கியது. மேலும் பந்தல மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சுவாமி அய்யப்பன் தனது சிறுவயதில் தற்போது கோயில் இருக்கும் இடத்திற்கு வந்து வீர விளையாட்டுக்களை கற்க வந்தார் என்றும் ஸ்தல புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோயிலில் மகாலிங்கம், சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்மராட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகஸ்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், கரடிமாடசாமி ஆகிய சுவாமிகள் குடி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் (30ம் தேதி) நடக்கும் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி கோயிலில் கால்நாட்டு வைபவம் நடந்தது. தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. சிறப்பு பெற்ற இக்கோயிலின் ஆடி அமாவாசை திருவிழா அன்று சுவாமி தரிசனம் செய்யவும், பொங்கலிடவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar