பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் கந்தர்சஷ்டி 4ம் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்தர்சஷ்டி விழா நவ.,12ல் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். கந்தர் சஷ்டி சூரசம்ஹார-திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, தினமும் மூலவர் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. உற்சவர் முருகன், வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். நேற்று 4ம் நாள்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை நவ.,17ல் சூரசம்ஹாரமும், மறுநாள் திருக்கல்யாணம் மாலையில் கல்யாண விருந்தும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.