பதிவு செய்த நாள்
21
நவ
2015
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின், ஐந்தாம் நாளான நேற்று, பகலில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சமேத வள்ளி தெய்வானை முருகன் மயில் வாகனத்திலும், சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் பெரிய ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் சிறிய ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.