சபரிமலையில் ஆக்ஸிஜன் பார்லர்களை இணைத்து ஹாட்லைன்அவசர கால உதவி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2015 10:11
சபரிமலை: அவசர கால உதவிக்காக ஆக்ஸிஜன் பார்லர்களை இணைத்து ஹாட்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் பக்தர்களுக்கு விரைவாக மருத்துவ உதவி கிடைக்கும்.பம்பையில் இருந்து சபரிமலைக்கு வரும் பாதையில் நீலிமலை, நீலிமலை டாப், அப்பாச்சிமேடு என மூன்று செங்குத்தான ஏற்றம் உள்ளது. இதில் பக்தர்கள் ஏறும் போது இதய துடிப்பு அதிகமாகி சிரமப்படுகின்றனர். மலை ஏறும் போது மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு உதவுவதற்காக இந்த பாதையில் ஆங்காங்கே 25-க்கும் மேற்பட்டஆக்ஸிஜன் பார்லர்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் பயிற்சி பெற்ற நர்ஸிங் மாணவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.இந்த பார்லர்களை பம்பை அரசு மருத்துவமனையுடன் இணைத்து இந்த ஆண்டு ஹாட்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பார்லர்களில் வரும் பக்தர்களின் உடல்நிலை மோசமாக இருந்தால் பம்பை மருத்துவமனைக்கு தகவல் செல்லும். அவர்கள் அங்கிருந்து அருகிலுள்ள சிறப்பு டாக்டர்களை அந்த பார்லருக்கு விரைவாக அனுப்பி வைப்பர். இதன் மூலம் அந்த பக்தருக்கு விரைவான மருத்துவ உதவி கிடைக்கும்.பத்தணந்திட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், இரண்டு லட்சம் ரூபாய் செலவில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.