செஞ்சி பகுதி கோவில்களில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2015 11:11
செஞ்சி: செஞ்சி பகுதி கோவில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி பெரியகரம் சிவசுப்ரமணியர் கோவிலில் ஐந்தாம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. முதல் நாள் திருமுருகன் தோற்றம், இரண்டாம் நாள் தந்தைக்கு உபதேசம், மூன்றாம் நாள் தாருகன் வதம், நான்காம் நாள் சிங்கமுகன் வதம், ஐந்தாம் நாள் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த17ம் தேதி ஆறாவது நாள் விழாவாக சூரசம்ஹாரம் நடந்தது. மறுநாள் (18ம் தேதி) இரவு வள்ளி, தெய்வானை யுடன் முருகப்பெருமான் திருக்கல்யாணமும், இரவு சாமி வீதியுலாவும் நடந்தது. கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவில் முருக பெருமானுக்கு கந்த சஷ்டி விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 17ம் தேதி காலை 108 சங்காபிஷேகமும், மாலை சூரசம்ஹார விழாவும் நடந்தது. மறுநாள் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி பி. ஏரிக்கரை மீதுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது. கடந்த 12ம் தேதி திருமுருகன் தோற்றமும். 17ம் தேதி இரவு சூரசம்ஹாரம், 18ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.