பதிவு செய்த நாள்
23
நவ
2015
11:11
பொங்கலூர்: கண்டியன்கோவில் சித்தி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது. கடந்த, 21ல் காலை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனை, பஞ்சகவ்ய பூஜை, தன பூஜை, யாக வேள்வி, நவக்கிரக வேள்வி நடைபெற்றது. மாலை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், யாக சாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், பூர்ணாஹுதி நடைபெற்றது. நேற்று காலை, நாடி சந்தானம், திரவியஹோமம், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு விநாயகர் கோவில்; 8:30க்கு மாரியம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தசதானம், தரிசனம், மகா அபிஷேகம், அலங்காரம், பெரிய பூஜை நடைபெற்றது. விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கண்டியன்கோவில் ஊர் பொதுமக்கள் செய்தனர்.