பதிவு செய்த நாள்
23
நவ
2015
11:11
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் சம்வத்சரா அபிஷேக தினம் நடந்தது. காட்டுவனஞ்சூர் கிராமத்தில் கடந்த 2013 ம் ஆண்டு, ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் நேற்று 2ம் ஆண்டு கும்பாபிஷேக தினம் நடந்தது. இதையொட்டி ராமர், சீதை, லஷ்மணர், ஆண்டாள், கிருஷ்ணர், லஷ்மிநரசிம்மர் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் யாகசாலை பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வெங்கடேச பாகவதர், துணை பி.டி.ஓ., அன்பழகன், பழமலை, எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி அழகரசன், கவிதா அழகரசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.