பதிவு செய்த நாள்
28
நவ
2015
11:11
மதுரை:மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும், என இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கூடுதல் கமிஷனர் (திருப்பணிகள்) கவிதா தெரிவித்தார்.மதுரை மண்டல ஆய்வு கூட்டம் மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று நடந்தது.தலைமை வகித்து கூடுதல் கமிஷனர் கவிதா பேசியதாவது:1915ம் ஆண்டுக்கு முந்தைய 11 ஆயிரம் கோயில்கள் புராதன சின்னமாக கருதப்படும். மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கும் கூடுதலான வருமானம் உள்ள 2763 கோயில்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள 6360 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.கோயில்களில் சுண்ணாம்பு வர்ணம் பூசுவது குறித்து, தொல்லியல் துறையின் ஆலோசனையை பெற வேண்டும். திருப்பணிகளுக்கு மாதம் ஆறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் மாரியம்மன் தெப்பக்குளம், அழகர்கோவில் சுற்றுச்சுவர், திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இணை கமிஷனர்கள் நடராஜன், பச்சையப்பன், ராஜமாணிக்கம், செல்வராஜ், வரதராஜன், உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.