கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஞானம்எண்சீர் விருத்தம்1. காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்நம்முடைய பூசையென்ன மேருப் போலேஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தேஉத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.2. தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்;தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்:சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப் போகா:வானென்ற மேருவைத்தான் பூசை செய்தார்வாய்திறந்தே உபதேசம் சொன்னா ராகிற்கோனென்ற வாதசித்தி கவன சித்திகொள்ளையிட்டான் அவன்சீடன் கூறி னானே.3. கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்:குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்;மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்:மைந்தனே! இவளைநீ பூசை பண்ணத்தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்:திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு:ஆறியதோர் யாமளையா றெழுத்தைக் கேளாய்:அவளுடைய பதம்போற்றிப் பூசை பண்ணே.4. பண்ணியபின் யாமளையைந் தெழுத்தைக் கேளாய்:பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்புவண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்குமைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்:கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருத்தாற்காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை;உண்ணியதோர் உலகமென்ன சித்த ரென்னஉத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!