பதிவு செய்த நாள்
09
டிச
2015
01:12
செஞ்சி: இஞ்சிமேடு லட்சுமி நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு கோ-பூஜையும், வரதராஜர், பெருந்தேவி தாயார், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், சீதா, லட்சுமணர், கருடாழ்வார், கல்யாண வரத அனுமன் ஆகியோருக்கு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து 10:00 மணிக்கு வரதராஜர், பூதேவி, பெருந்தேவி தாயாருடன் யாகசாலையில் எழுந்தருளினார். கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு ஹோமம் நடத்தினர். இதில் நரசிம்ம, கருட, மகாலட்சுமி, தன்வந்திரி பூஜையும் ஒரு லட்சம் மந்திரங்களும் படித்தனர். ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.