குன்றத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா டிச. 17ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2015 03:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குனறம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா டிச. 17ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது. டிச. 24வரை தினம் மாணிக்கவாசகர் கோயில் திருவாட்சி மண்டபத்தை மூன்றுமுறை வலம்வந்து எழுந்தருள்வார். ஓதுவாரால் திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்படும்.டிச. 25 காலை மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் நடக்கும். இரவு கண்ணூஞ்சல் முடிந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் புறப்பாடாகி கோயில் முன்பு சிறிய ராட்டினத்தில் எழுந்தருளி ராட்டின திருவிழா நடக்கும். டிச.26 அதிகாலை கோயில் மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைல காப்பு சாத்துப்படியாகும். உற்சவருக்கு அபிஷேகம் முடிந்து பூ சப்பரங்களில் கிரிவலம் நிகழ்ச்சி நடக்கும்.