ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல் பத்து உற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2015 11:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல உற்சவ விழாக்கள் நடந்தாலும், வைகுண்ட ஏகாதசி விழாவே முதன்மையானதாக கருத்தப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த விழா 21 நாட்கள் நடைபெறுகிறது.
கோயிலில் சிறப்புக்குரிய பகல் பத்து விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு, நம்பொருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நீல்முடி, வைரஅபயஹஸ்தம், 18 சரம் முத்துஆரம், நெல்லிக்காய் மாலை அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.