Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் சித்திரை விஷூ கோலாகல ... சபரிமலையில் தீவிரவாத தாக்குதல் கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை! சபரிமலையில் தீவிரவாத தாக்குதல் கேரள ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
தேசிய வழிபாடு நகரமாகிறது சபரிமலை!
எழுத்தின் அளவு:
தேசிய வழிபாடு நகரமாகிறது சபரிமலை!

பதிவு செய்த நாள்

14 டிச
2015
10:12

சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாடு நகரமாக்கும் அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலை அமைந்துள்ள இடம், பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. இங்கு, எந்த பணி நடத்த வேண்டுமென்றாலும், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். பல திட்டங்களுக்கு வனத்துறை அனுமதி கொடுக்காமல் கிடப்பில் கிடக்கிறது. ஒரு மரம் வெட்டினால், 10 மரம் நட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், சபரிமலையை தேசிய வழிபாட்டு மையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இது தொடர்பாக, கேரள அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. முதல்வர் உம்மன் சாண்டியும், அமைச்சர்களும் டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்து, இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

கேரள பா.ஜ., தரப்பிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இன்றும், நாளையும் கேரளாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், சபரிமலையை வழிபாட்டு நகரமாக அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம், சபரிமலைக்கு அதிக அளவில் மத்திய அரசு நிதி கிடைக்கும்; பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், கோவில் நிர்வாகம், உரிமை, வருமானம் என, எதையும், எவருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என, தேவசம் போர்டு ஊழியர்கள சங்கம் கூறியுள்ளது.

சபரிமலை வருமானத்தை வைத்து தான் தேவசம் போர்டின் கீழ் உள்ள, 1,248 கோவில்களில் விளக்கு ஏற்றப்படுகிறது. அதனால், சபரிமலை அதிகாரம், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் வசம் தான் இருக்க வேண்டும். - பைஜு, தேவசம் போர்டு ஊழியர் சங்க தலைவர்

பக்தர்கள் உதவி மையம்: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் உதவி மையம், சபரிமலை சன்னிதானத்தில் திறக்கப்பட்டது. சன்னிதானத்தில் பெரிய நடைபந்தலில் உள்ள திருவிழா கட்டுப்பாடு அலுவலகத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.தமிழக பக்தர்கள் மொழி ரீதியாக சிரமப்படும் போது, அவர்களுக்கு தேவையான தகவல்களை இங்கு பெற முடியும். குமரி மாவட்ட தேவசம் போர்டில் பணிபுரியும் அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக பக்தர்கள் உதவி மைய அலைபேசி எண்கள்: 98942 52632, 99949 48299, 99940 45032

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
 சபரிமலை: பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை உள்ள கியூ காம்ப்ளக்ஸில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் முழுமையாக வராததால் காலை 6:00 மணிக்கு பின் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு சத்திரம் பாதையில் கால ... மேலும்
 
temple news
சபரிமலை; பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. ஸ்பாட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar