பதிவு செய்த நாள்
14
டிச
2015
11:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று, சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று, காலை 7:00 மணியள வில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி துவங்கி, இரவு 7:00 மணிக்கு நிறைவடைந்தது.மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசக பதிகத்தை மனமுருகி சிவனடியார்கள் பாடினர். திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் தலைமையில் திருவாசகம் பாடப்பட்டது. மேலும், ஏகாம்பரநாதர் கோவிலுக்காக, கடந்த ஆண்டு தங்கத்தேர் செய்யும் பணி துவங்கியது. அந்த பணி விரைவில் முடிய, இந்த முற்றோதல் நிகழ்ச்சி யில், பக்தர்கள் பிரார்த்தனையுடன் திருவாசகம் பாடினர்.