பதிவு செய்த நாள்
15
டிச
2015
10:12
திருப்பூர் : திருப்பூர், ஷீரடி சாய்பாபா கோவிலில், 1008 சங்காபிஷேக பூஜை நேற்று நடைபெற்றது. யுனிவர்செல் தியேட்டர் ரோடு, ஷீரடி சாய்பாபா கோவில் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, கோலாட்டம், கும்மியாட்டம், செண்டை வாத்தியம், வாண வேடிக்கையுடன், பக்தர்களின் திரு விளக்கு ஊர்வலம் மற்றும் பாபா பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. நேற்று காலை, 8:00 மணிக்கு, அவிநாசி திருப்புகொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் முன்னிலையில், கணபதி ஹோமம் மற்றும், 1008 சங்காபிஷேக பூஜை மற்றும் சங்கு தீர்த்தம் மூலம், சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், ஆரத்தி, பஜனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.