ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி, ஆண்டாள் கோயில் மாட வீதி ரோடுகள் சேதமடைந்துள்ளது. இதனை கும்பாபிஷேகத்திற்கு முன் சீரமைக்கவேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலை சுற்றி நான்கு மாடவீதிகளில் சிமென்ட் ரோடுகள் உள்ளன. இதில் கந்தாடைத்தெரு மாடவீதி மற்றும் கீழ மாடவீதிகளில் உள்ள சிமென்ட் ரோடுகள் சிதைந்து, ஜல்லிகற்கள் பெயர்ந்து வருகின்றன. இதனால் சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்வோர் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பாதிக்கின்றனர்.
சீரமைக்க வேண்டும்: வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தபாதே இந்த ரோட்டை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சீரமைக்கப்படவில்லை. 2016 ஜன.,20ல் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், இந்த மாட வீதி ரோடுகள் சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். * தொடர் கனமழையால் ஸ்ரீவி.,யில் பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்துள்ளன. தற்போது வெயில் அடித்து வருவதால் அதிக போக்குவரத்து உள்ள ரோடுகளில் தூசி பறக்க துவங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் கண்களில் தூசிபட்டும், இருமலாலும் அவதிப்படுகின்றனர். ரோடுகளை சீரமைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.