திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2015 11:12
திருநெல்வேலி :நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கோயிலில் டிச.,17 முதல் 26ம் தேதி வரை அதிகாலை 5 முதல் 6 மணிவரை திருவெம்பாவை வழிபாடு நடக்கிறது.டிச., 20ஆம் தேதி இரவில் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில், பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா நடைபெறும். 25ல் தாமிரசபையில் நடராஜனுக்கு திருநீராட்டு, சிறப்பு தீபாராதனை,26ல் அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து காலை 4.50 மணி முதல் 5.20 வரை தாமிரசபையில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.