கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பெரிய ஏரி கோடிக்கரையில் பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தேய் பிறை அஷ்டமி நாளில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமன்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு, கிருஷ்ணகிரி- மகாராஜகடை சாலையில் கணபதி நகரில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில், 3 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். இந்த சாலை சிறிது தூரம் மட்டுமே தார் சாலையாக உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.