பதிவு செய்த நாள்
21
டிச
2015
11:12
ஈரோடு: வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், 24 மணி நேரமும் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை, 4.30 மணி முதல் 7.30 மணி வரை, கோவை ஏக்நாத் பஜன் குழு நாம சங்கீதம், காலை, 7.30 மணி முதல், 10 மணிவரை ஆயக்குடி அனந்த கிருஷ்ணன் கீர்த்தனம் நடக்கிறது. காலை, 10 மணி முதல், மதியம், 1 மணிவரை ப்ரும்மஸ்ரீ கார்த்தி கிருஷ்ணன் நாம கீர்த்தனம், பகல், 1 மணி முதல், மாலை, 4 மணி வரை ஸ்ரீரங்கம் ராமசந்திர பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. மாலை, 4 மணி முதல், 6.30 மணி வரை ஈரோடு ஸ்ரீ கஸ்தூரி ரங்கா பஜன் மண்டலின் நாமகீர்த்தனம் நடக்கிறது. மாலை, 6.30 மணி முதல், 7.20 மணி வரை சேலம் குருஜி ஆத்ம நம்பி, பகவத் கீதை சிறு சொற்பொழிவாற்றுகிறார். இரவு, 7.20 மணி முதல், 10.30 வரை சென்னை அக்?ஷரா பரத நாட்டியம், வினேஷ் மகாதேவன் குழுவினரின் குருராமர் பட்டாபிஷேகம், நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. இரவு, 10.30 மணி முதல், செவ்வாய் அதிகாலை, 2.30 மணி வரை, கடையநல்லூர் ராஜகோபால் நாமகீர்த்தனம் நடக்கிறது.