கோவை: சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜையை யொட்டி மகா அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. 40 ஆயிரம் பேர் பங்கேற்று உணவருந்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் செய்தனர்.மலேசியா கராத்தே போட்டி வித்யாஸ்ரம் பள்ளி தேர்வுகோவை n மலேசியாவில் நடக்கவுள்ள கராத்தே போட்டிக்கு வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றனர். திருப்பூர் மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் தேசிய அளவில் கராத்தே போட்டி நடந்தது. இதில், வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் மிதுன், சுஜய், பிரணவ் விஷால் ஆகியோர் கட்டா பிரிவிலும்; வருண், மிதுன்-குமிட்டே பிரிவிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் பிப்ரவரியில் மலேசியாவில் நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்கின்றனர்.