ராஜபாளையம்: ராஜபாளையம் 17வது வார்டில் உள்ள மாரியம்மன் கோயில், இருளப்பசாமி கோயில் வளாகத்தில் நடந்த 18 சித்தர்கள் வழிபாடு சிறப்பு பூஜை, அன்னதானத்திற்கு ஆதிதிராவிடர் உறவின்முறை தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். கவுன்சிலர் ராமகுமரேசன், பூஜை கமிட்டியை சேர்ந்த அபிமன்யு முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் செல்வசுப்பிரமணிய ராஜா, ராஜூக்கள் கல்லூரி செயலாளர் ஏ.ஏ.எஸ். ஷியாம் ஆடை தானம் செய்தனர். 18 சித்தர்கள் குறித்து ராஜபாளையம் ஓம் ஸ்ரீ குபேர ஆஸ்ரம நிர்வாகி லிங்கம் சாமி, கோவிந்த ராஜ், பன்னிரு திருமறை மன்ற நிர்வாகி கருப்பையா பேசினர். மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகி ஜெயசீலன், போஸ்ட் மாஸ்டர் ஓய்வு சஞ்சீவி உட்பட பலர் கலந்துகொண்டனர். சக்தி பீடம் ஞானகுரு ஓதுவார் சுவாமிகள் ஆசி வழங்கினார்.