குமாரபாளையம்: குமாரபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், 18ம் ஆண்டு லட்ச அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, மற்றும் திருவிளக்குகளுடன் அலங்கார திருவீதி உலா நடந்தது. குமாரபாளையம் நாராயண நகர், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், 18ம் ஆண்டு லட்ச அர்ச்சனை, புஷ்பாஞ்சலி விழா ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடந்தது. அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். தஞ்சை ராமகிருஷ்ணா விவேகானந்தா சேவாஸ்ரம தலைவர் கிருஷ்ணானந்த மகராஜ் லட்ச அர்ச்சனையை துவக்கி வைத்தார். பெண்கள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்திவர ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவில், 60 ஆண்டுகள் சபரிமலை யாத்திரையில், 909 முறையாக சபரிமலை யாத்திரை முடித்த கேரளா மாநிலம் , பெருங்கோட்டுகாவு பங்கஜ் குருசாமி பங்கேற்று, திருவிளக்கு திருவீதி உலாவை துவக்கி வைத்தார். சபரிமலையில் நடப்பது போன்று திருஆபரணபெட்டி, கற்பூர ஆழியுடன் திருவிளக்கு ஊர்வலம் நடந்தது.