பதிவு செய்த நாள்
05
ஆக
2011
11:08
திருநெல்வேலி : உலக நன்மைக்காக ராமையன்பட்டி சித்திவிநாயகர் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்தது.உலக நன்மை, சர்வமத ஒற்றுமை, உலக அமைதிக்காக ராமையன்பட்டி சித்திவிநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. லட்சார்ச்சனையை முன்னிட்டு தேவதா அணிக்கை, விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி சங்கல்பம், புண்ணியாவாஜனம், கும்ப பூஜை, மகாகணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து லட்சார்ச்சனை, மகாகணபதிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது.ஏற்பாடுகளை ராமையன்பட்டி பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.