Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரன்முளாவில் புறப்பட்டது தங்கஅங்கி ... 1,000 ஆண்டு பழமையான மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்! 1,000 ஆண்டு பழமையான மன்னீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை இஸ்கான் கோயிலில் பகவத்கீதை பிறந்த நாள் விழா!
எழுத்தின் அளவு:
மதுரை இஸ்கான் கோயிலில் பகவத்கீதை பிறந்த நாள் விழா!

பதிவு செய்த நாள்

23 டிச
2015
01:12

மதுரை: வேதஞானத்தின் மணிமகுடமாகத் திகழும் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் டிச.21ல் கொண்டாடப்பட்டது. பகவத்கீதையின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்து வழங்குவதையே தன் வாழ்வின் உயிர் நாடியாக கொண்டு செயல்படும் இஸ்கான், பகவத்கீதை பிறந்த நாளை அனைத்து இடங்களிலும் விசேஷமாக கொண்டாடியது.

மணிநகரத்திலுள்ள மதுரை இஸ்கான் கோயிலில் இவ்விழா பகவத்கீதை பாராயணத்துடன் துவங்கியது. சிறப்பு நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணி முதல் நடந்தன. விழாவை முன்னிட்டு ஸ்ரீஸ்ரீராதா மதுராபதியின் திருவிக்ரஹங்களின் முன்பாக பகவத்கீதைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. விழாவின் சிறப்புச் சலுகையாக, ரூ.300 மதிப்புள்ள பகவத்கீதை புத்தகம், நன்கொடை ரூ.200க்கு வழங்கப்பட்டது. மேலும் இத்துடன் கீதை மற்றும் யோகா சம்பந்தமான ஆறு விளக்கப்புத்தங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. மக்கள் நலன் கருதி, இந்த சிறப்புச் சலுகையில் பகவத்கீதை புத்தகம், மார்கழி மாதம் முழுவதும் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து பகவத்கீதை, கீதா மஹாத்மியம் குறித்து சிறப்புரை நடைபெற்றது. இதில், பகவத்கீதை அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய முக்கியமான நூலாகும். பகவத்கீதையினை ஒவ்வொருவரும் தனது இல்லத்திலும், அலுவலகத்திலும் வைத்திருக்க வேண்டும்.

தினசரி உறங்கும் முன்பாக பகவத்கீதையினைஅவசியம்படித்தால், தீயஎண்ணங்கள்நீங்கி நல்லதொரு தெய்வ சிந்தனைகள் மலரும். அது மட்டுமல்லாது வேத சாஸ்திரங்களில் குறிப்பிட்டிருப்பது போல், யார் ஒருவர் பகவத்கீதையின் ஒரு ஸ்லோகத்தையோ அல்லது கால் ஸ்லோகத்தையோ கூட தினசரி தவறாமல் படிக்கின்றாரோ அவர் எல்லா விதமான பாவங்களிலிருந்தும் விடுபட்டு பகவானின் திவ்ய ஸ்தலத்தை அடைவார் என்பது உறுதியானதாகும். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், நீங்கள் படிக்கும் பகவத்கீதை புத்தகத்தில் உள்ள விஷயங்கள் உள்ளது உள்ளபடி இருக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலான புத்தகங்கள் பகவத்கீதை என்ற பெயரில் பல சொந்த கருத்துகள் அல்லது இடைச் செருகல்களுடன் உள்ளன. பகவத்கீதை உண்மையுருவில் என்ற புத்தகத்தில் கீதையின் கருத்துக்கள் உள்ளது உள்ளபடி உள்ளது. மேலும் இதில் உள்ள உரைவிளக்கங்கள் அனைத்தும் பல வேத உபநிஷத்துகளின் மேற்கோள்களின் கீழ் , சுவாமி ஸ்ரீலபிரபுபாதா அவர்களால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பகவத்கீதைஉண்மையுருவில்புத்தகம்பயனுள்ளதுஎன்பதற்கு சான்று என்னவென்றால், இதனைப் படித்த எத்தனையோ ஆயிரக்கணக்கான லட்சகணக்கான மக்கள் தங்கள் வாழ்வில் பக்குவம் அடைந்து வருகின்றனர் என்பதே ஆகும். எனவே அனைவரும் பகவத்கீதை பிறந்த இந்த நன்னாளில் பகவத்கீதையினை உண்மையுருவில் படித்து பயன்பெற வேண்டும். மற்றவர்களுக்கு கீதையின் மகத்துவத்தை எடுத்து கூற வேண்டும் என்று குறிப்பிட்டார்.  சிறப்புச் சலுகையில் பகவத்கீதை புத்தகங்கள் வழங்கப்பட்டன.

- இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை. போன்: 2346472

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar