பதிவு செய்த நாள்
24
டிச
2015
11:12
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில், மார்கழி மாத கிருத்திகை உற்சவம் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், கிருத்திகை விழாவை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், பாலசித்தர், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு, மூலவர் தங்க கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அலகுகள் குத்தியும், அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு, உற்சவர், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், நடந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்திருந்தார்.