Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் துவாதசி தரிசனம் பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மூன்று நாட்களில் மண்டலபூஜை: தங்க அங்கி பவனி புறப்பட்டது!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மூன்று நாட்களில் மண்டலபூஜை: தங்க அங்கி பவனி புறப்பட்டது!

பதிவு செய்த நாள்

24 டிச
2015
12:12

சபரிமலை: சபரிமலையில் மண்டலபூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டது. சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜை தான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும்.

பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி இந்த பவனி பம்பை வந்தடையும்.நேற்று அதிகாலை ஐந்து மணி முதல் கோயில் முன்புறம் இந்த அங்கி பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் நடத்தினர். பின்னர் 6.30 -க்கு அங்கி சபரிமலை மாதிரி ரதத்தில் வைக்கப்பட்டது. ஏழு மணிக்கு இங்கிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது. நேற்று இரவு ஓமல்லுார் பகவதி கோயிலில் இந்த பவனி தங்கியது,இன்று காலை இங்கிருந்து புறப்படும் பவனி இரவு கோந்நி முருங்கமங்கலம் கோயிலில் தங்குகிறது. நாளை காலை அங்கிருந்து புறப்படும் பவனி இரவு பெருநாடு சாஸ்தா கோயிலில் தங்குகிறது. 26-ம் தேதி காலை இங்கிருந்து புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி மாலை மூன்று மணிக்கு தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். 26ல் மாலை 6.30 மணிக்கு தங்கஅங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். 27-ம் தேதி மண்டல பூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். தங்கஅங்கி பவனிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மண்டலபூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சரங்குத்தியில் அங்கிக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரஇருக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar