திண்டுக்கல் : கம்பிளியம்பட்டி அருகே கே. ஆண்டிப்பட்டியில் மகாலட்சுமி கோயிலில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி செலுத்தப்பட்டது. இங்கு ஆடிப்பெருக்கு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, நோய்கள் தீர, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. பிரமுகர்கள் அம்மாசி, முருகேசன், பூசாரி நடராஜ், பழனிச்சாமி, ஊராட்சி தலைவர் வீரச்சாமி பங்கேற்றனர்.முன்னதாக கம்பத்தில் நெய்வேத்தியம் ஏற்றப்பட்டது. ஆணி காலணி அணிந்து கோயிலை சுற்றி வலம் வந்தனர்.