குறிச்சி: கோவை, ஷாபியா ஹயாத்துல் ஜமா - அத் சார்பில், மிலாது நபி விழா நடந்தது. குறிச்சி பிரிவிலுள்ள, ஷாபியா ஹயாத்துல் இஸ் லாம் சுன்னத் ஜமா - அத் சார்பில் நடந்த விழா முன்னிட்டு, சிறுவர், சிறுமியர் ஊர்வலமாக, நஞ்சுண்டாபுரம் இட்டேரி வழியாக, போத்தனுார் ரோடு, கருப்பராயன் கோவில் அருகேயுள்ள பள்ளிவாசலை சென்றடைந்தனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. காதர், பாவா உட்பட பலர் பங்கேற்றனர்.