திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், இலவச திருப்பாவை பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டு உள்ளது. சின்ன காஞ்சிபுரம் என அழைக்கப்படும், காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், குழந்தைகளுக்கு, திருப்பாவையை இலவசமாக கற்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், விவேகானந்தா, பத்மநாபா பள்ளிகளைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். திருப்பாவை புத்தகம் வழங்கப்பட்டது. மார்கழி மாதம் முழுவதும் வகுப்புகள் நடத்தப்பட்டு, மாத இறுதியில் திருப்பாவை ஒப்பித்தல் போட்டி நடத்தப்படும். சிறந்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.