தென்கரை: சோழவந்தான் தென்கரை சாஸ்தா ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. ஐயப்பனுக்கு 18 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தன. சிவாச்சார்யார் ரவி சுப்பிரமணியம் முன்னிலையில் பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.