ராமர் கோவில் தடையின்றி கட்ட ஆஞ்சநேயர் சிலை அனுப்பி வைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2015 12:12
சேலம்: அகில பாரத இந்து மகா சபை சார்பில், அயோத்தியில் ராமர் கோவில், தடையின்றி கட்டுவதற்காக ஆஞ்சநேயர் சிலை, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அகில பாரத இந்து மகா சபை தலைவர் சுவாமிநாதன், இந்து அதிரடி படை செயலாளர் ராஜகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் ராஜகுரு நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தி ராமர் பிறந்த புண்ணிய தலம். ராமருக்கு மிகவும் உறுதுணையாக செயல்பட்டவர் ஆஞ்சநேயர். பல்வேறு தடைகளுக்கு பிறகு தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியானது துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கோவில் கட்டும் பணியானது தடையின்றி சிறப்பாக நடப்பதற்காக, அயோத்திக்கு அனுப்பி வைப்பதற்காக, சபா சார்பில் கோபியில் இருந்து, மிகவும் சக்தி வாய்ந்த, மூன்றடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையை காரில் கொண்டு வந்தோம். கோட்டை மாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனுமந் ஜெயந்தி விழாவன்று, அயோத்திக்கு சென்று சிறப்பாக கொண்டாடவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.