ப.வேலூர்: பொத்தனூர் பகவதியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 25ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, நன்செய் இடையாறு ராஜா கோவிலில் இருந்து வேல் எடுக்கும் நிகழ்ச்சி, அம்மன் ஊர் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை ஜேடர்பாளையம் சாலை, காந்தி நகர், மேற்கு வண்ணாந்துறை, தண்ணீர்பந்தல்மேடு, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அம்மன் ஊர் விளையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை, 4 மணிக்கு காவிரியாற்றில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றுதலும் புதன்கிழமை காலை கிடா வெட்டும், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.