பந்தலுார்: பந்தலுார் அருகே அத்திக்குன்னா கே.கே.நகரில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற கட்டட திறப்பு விழா, வேள்வி பூஜை நடந்தது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட நிர்வாக குழு தலைவர் இந்திராணி நடராஜன், கட்டடத்தை திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., திராவிடமணி கொடியேற்றினார்.வழிபாட்டு மன்ற தலைவர் காங்கமுத்து, துணை தலைவர் மணிபாலன், மாவட்ட செயலாளர் சுரேஷ்ரமணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து,வேள்வி பூஜை நடந்தது. பின்பு நடந்த ஆடைதானத்தை, மகளிர் அணி இணை செயலாளர் ஹேமலதா துவக்கி வைத்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.