குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே உள்ள, பல்லக்காபாளையம் செங்கமா முனியப்பன் கோவிலில் பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. குமாரபாளையம் அடுத்த பல்லக்காபாளையத்தில் உள்ள, செங்கமா முனியப்பன் கோவில் விழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி முனியப்ப ஸ்வாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வந்தது. நேற்று, உற்சவ பெரும் பூஜையும், அபிஷேகமும் நடந்தது. இன்று, குமாரபாளையம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் முனியப்ப ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. நாளை ( ஜன.,2) பொங்கல் விழா நடக்கிறது. ஜன.,3ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.