பதிவு செய்த நாள்
02
ஜன
2016
03:01
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரணப் பொருட்களை, பங்காரு அடிகளார் வழங்கினார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆங்கில புத்தாண்டு விழா நேற்று நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், சென்னை மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 30 லட்சம் ரூபாயும்; பெங்களூரு ஜெயதேவா இதய மருத்துவமனைக்கு, 12 லட்சம் ரூபாயும்; சங்கரா புற்றுநோய் மருத்துவமனைக்கு, 5 லட்சம் ரூபாயும்; மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக அன்னை இல்லத்திற்கு, 3 லட்சம் ரூபாயும் என, 50 லட்சம் ரூபாய்க்கான நிவாரணப் பொருட்களை, பங்காரு அடிகளார் வழங்கினார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்
செந்தில்குமார், கர்நாடக லோக்சபா உறுப்பினர் மோகன், கர்நாடக மாநில விவசாய
விளைபொருள் மார்க்கெட்டிங் பெடரேஷன் இயக்குனர் சுதர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.