Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆல்கொண்டமால் கோவிலுக்கு.. ... அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் வரும் 9ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ண வித்யாலயத்தில் குருபூஜை கோலாகலம்!
எழுத்தின் அளவு:
ராமகிருஷ்ண வித்யாலயத்தில் குருபூஜை கோலாகலம்!

பதிவு செய்த நாள்

05 ஜன
2016
11:01

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நடந்த ராமகிருஷ்ணர் குருபூஜை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு வித்யாலய மாணவர்கள், நாயக்கன்பாளையம், வீரபாண்டி கிராமப்புற பஜனைக் குழுக்களின் பஜனைகளும், அவிநாசிலிங்க பல்கலை மாணவியரின் பிரார்த்தனையும் நடந்தது. சிங்கப்பூர் ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி விமோஷானந்தர் கொடியேற்றினார். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை துணைவேந்தர் மூர்த்தி, கல்வி பொருட்காட்சியை திறந்து வைத்து பேசுகையில்,“இக்கால மாணவர்களின் அறிவுத்திறன், இது போன்ற பொருட்காட்சிகளில் வெளியாகிறது. கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வெறும் கல்வி கற்பிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், கலை, கலாசாரம், பண்பாடு குறித்தும் கற்றுத் தர வேண்டும்,” என்றார்.

இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், வித்யாலய மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி, சேலம் விஷ்ணுப்பிரியா குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆகியன நடந்தன. பொதுக் கூட்டத்தில், சுவாமி விமோஷானந்தர், பட்டிமன்ற பேச்சாளர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனை சேர்ந்த துறவிகள் பங்கேற்றனர். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லுாரி முதல்வர் முத்தையா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகள், வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி அபிராமானந்தர் தலைமையில் செய்யப்பட்டிருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar