மதுரை: மதுரை சத்குரு சங்கீத சமாஜத்தின் 64வது ஆண்டு இசை விழா நேற்று துவங்கியது. இதையொட்டி நடந்த இசைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சமாஜ தலைவர் ஷோபனா பரிசு வழங்கினார்.கனரா வங்கி பொது மேலாளர் வேலுச்சாமி பேசியதாவது: இனிமையான இசைக்கு மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட மயங்கும். இசையால் செடி, கொடிகள் வளர்கிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இசைக்கருவிகளின் இசை, கலைஞர்களின் குரலில் பிறக்கும் கீதங்களை நாம் ரசிக்க வேண்டும், என்றார்.துணைத் தலைவர் கணபதி சர்மா, பொதுச் செயலாளர் வெங்கட் நாராயணன், பொருளாளர் சிவராம கிருஷ்ணன், மேலாளர் சந்திரசேகரன், செயலாளர் ராஜாராம் பங்கேற்றனர். ராமகிருஷ்ண மூர்த்தி குழுவினரின் வாய்ப்பாட்டு நடந்தது.